சாத்தப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் கடந்த 7 நாட்களாக நடைபெற்றது. முகாமின் இறுதி நாளான இன்று சாத்தப்பாடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தலைமையில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான ரத்த வகை கண்டறிதல் முகாம் நடைபெற்றது. முகாமில் மாணவர்களுக்கு உடல் நலம் மற்றும் மனநலம் சார்ந்த அறிவுரைகள் வழங்கப்பட்டது.