சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வளையமாதேவி கிராமத்தில் உள்ள அரசு மதுபான கடையில் பாஜகவின் ஆத்தூர் கிழக்கு ஒன்றிய தலைவர் அமுதா தனது கட்சி நிர்வாகிகளோடு அப்பா அரசு மதுபான கடையில் 1000 கோடி ஊழல் என்ற ஸ்டாலின் படம் படுத்திய போஸ்டரை ஒட்ட முயன்ற போது ஆத்தூர் ஊரக காவல் நிலைய போலீசாருக்கும் பாஜகவினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஒன்றிய தலைவி எங்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆணைக்கிணங்க நாங்கள் ஸ்டாலின் படத்தை ஒட்டுவோம் என கூறி மு க ஸ்டாலின் படத்தை ஒட்டியதால் காவல்துறையினர் பாஜகவினரின் இரு சக்கர வாகனத்தை மறித்து கொண்டு படம் பிடித்த பாஜக நிர்வாகியை போலீசார் விரட்டியதும் அதனைத் தொடர்ந்து அக்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.