வாழப்பாடி அருகே உள்ள அத்தனூர்பட்டி ராஜவீதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 45). லாரி டிரைவர். இவருக்கும், மகேஸ்வரி என்பவருடைய குடும்பத்தின ருக்கும் வீடு வாங்கிய விவகாரம் தொடர்பாக முன்வி ரோதம் இருந்து வருகிறது. சம்பவத்தன்று வெங்கடேஷ் மின்னாம்பள்ளி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை மாதேஸ் வரி, இவருடைய மகன்கள் கண்ணபிரான், ரங்கன் மற் றும் பச்சையப்பன் ஆகியோர் வழிமறித்து தாக்கினர். மேலும் கத்தியால் அவருடைய கழுத்தை அறுத்து கொல்ல முயன்றதாக தெரிகிறது. இதில் பலத்த காயம் அடைந்த வெங்கடேஷ் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் வாழப்பாடி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் மகேஸ்வரி, கண்ணபிரான், ரங்கன், பச்சையப் பன் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்