தமிழகத்தில் பணி நெருக்கடியை கைவிடவும், அனைத்து பணிநிலையில் கலந்தாய்வு மூலம் பணி மாறுதல் வலியுறுத்திதமிழக முழுவதும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் என அனைவரும் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினர். வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அனைவரும் கருப்பு பட்டை அணிந்தவாறு பணியாற்றி வருகின்றனர். கோரிக்கைகள் நிறைவேற்றவில்லை எனில் வருகின்ற 23ஆம் தேதி மாவட்ட தலைநகர பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனதமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.