ஆத்தூர் ௯ட்டுறவு சங்கத்தி ல் ரூ. 21 லட்சம் பருத்தி வர்த்தகம்

62பார்த்தது
சேலம் மாவட்டம், ஆத்தூர் புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நேற்று (டிசம்பர் 23)  நடைபெற்றது. இதில் ஆத்தூர், தலைவாசல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 179 விவசாயிகள் 1044 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 

ஆத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை பகுதிகளைச் சேர்ந்த 12 வியாபாரிகள் பருத்தியின் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்தனர். இந்நிலையில் பி.டி. ரகம் குவிண்டால் ரூ.6,659 முதல் ரூ.7,569 வரை, டி.சி.ஹெச்., ரக குவிண்டால் ரூ.7,589 முதல் ரூ.9,789 வரை, கொட்டு பருத்தி (கழிவு) ரூ.3,589 முதல் ரூ.4,569 வரை விற்பனையானது. மொத்தம் 1044 மூட்டைகள், மொத்த குவிண்டால் 406 பருத்தி ரூ.21 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி