சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே பிரதான சாலையாக செயல்பட்டு வரும் மாரிமுத்து ரோடு தெரு பகுதியில் வசித்து வரும் பழ வியாபாரியான கணேசன் விற்பனைக்காக பழங்களை தனது tata ace வாகனத்தில் எடுத்துச் சென்று விற்பனை செய்வது வழக்கம் இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் விற்பனையை முடித்துவிட்டு தனது வீட்டின் அருகே உள்ள சாலையில் டாட்டா ஏசு சரக்கு வாகனத்தை நிறுத்திவிட்டு சென்று உள்ளார். இன்று அதிகாலை எழுந்து வியாபாரத்திற்கு செல்வதற்காக வெளியே வந்து பார்க்கும் பொழுது tata ace சரக்கு வாகனம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார் உடனடியாக அப்பகுதியில் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்து உள்ளார். அப்போது கடைவீதி பகுதியில் சாலை ஓரம் சரக்கு வாகனம் நின்று இருப்பதைக் கண்ட கணேசன் உடனடியாக அங்கிருந்து வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளார் மேலும் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது நேரம் சிறுவன் ஒருவன் நிறுத்தப்பட்டிருந்த tata ace சரக்கு வாகனத்தை எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகி உள்ள நிலையில் போலீசார் சரக்கு வாகனத்தை திருடி சென்ற சிறுவன் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.