சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தென்னங்குடி பாளையம் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது. பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் அதற்கான திறப்பு விழா இன்று (ஜனவரி 3) நடைபெற்றது. ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை ஆத்தூர் ஒன்றிய குழு தலைவர் பத்மினி பிரியதர்ஷினி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் ஆத்தூர் திமுக ஒன்றிய செயலாளர் செழியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.