சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான கல்லாநத்தம், துலுக்கனூர், ராமநாயக்கன்பாளையம், செல்லியம்பாளையம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 11 மணிக்குமேல் வெயில் தாக்கம் அதிகரித்து கோடை வெயில் போன்று சுட்டெரித்தது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில், மழை பெய்து வந்த நிலையில் தற்போது வெயில் வாட்டி வதைப்பதால். பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.