ஆத்தூர் 10 ம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

65பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்பட்டி பகுதியில் செல்வகுமார் ராஜேஸ்வரி தம்பியின் மகள் ஹரிணி(15)பெத்தநாயக்கன்பாளையம் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். பெற்றோர் இருவரும் கூலி வேலைக்கு சென்ற நிலையில்
மாணவி வீட்டில் பள்ளிக்கு புறப்பட்ட நிலையில் திடீரென வீட்டுக்குள் சென்ற மாணவி ஹரிணி இருந்து நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த மாணவியின் பாட்டி உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது பள்ளி சீருடையில் தனது துப்பட்டாவில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் மாணவி ஹரிணி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலைட்டுள்ளார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் மாணவியின் உடலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் தகவல் அளித்த நிலையில் தொடர்ந்து மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் மாணவி உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்த ஆத்தூர் நகர போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.
நிகழ்விடத்திற்கு வந்த ஆத்தூர் நகர போலீசார் மாணவி உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பதற்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியின் தந்தை எதற்காக தற்கொலை செய்து கொண்டாய் என கண்ணீரோடு கதறியது அங்கிருந்த பொதுமக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி