ஆத்தூர் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து பயணிகள் வாக்குவாதம்

58பார்த்தது
சேலத்திலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி நேற்று இரவு தனியார் பேருந்து வந்தது. சேலம் பேருந்து நிலையத்திலிருந்து ஆத்தூர் பேருந்து நிலையம் வரை அதி வேகமாக பேருந்து இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது இதுகுறித்து பேருந்தில் கைக் குழந்தையுடன் பயணம் செய்த பயணிகள் நடத்துனரிடம் முறையிட்டுள்ளனர் அதற்கு அலட்சியமாக நேரம் இண்மை காரணமாக வருவதாகவும் நீங்கள் உங்கள் குழந்தைகளை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என அலட்சியப் போக்கோடு பதில் அளித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஆத்தூர் பேருந்து நிலையத்திற்கு வந்த பேருந்தில் இருந்து கீழே இறங்கிய பயணிகள் நடத்தினர் மற்றும் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கர்ப்பிணிகள் மற்றும் வயதானவர்கள், குழந்தைகள் பேருந்தில் இருந்த நிலையில் ஓட்டுநர் அதிவேகமாக வந்ததாகவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பேருந்து சிறை பிடித்து நின்றனர். இது குறித்த தகவல் என்று வந்த ஆத்தூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து பேருந்து ஓட்டுனர் அதிவேகமாக பேருந்தை இயக்கி வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து பேருந்தை அதிவேகமாக ஓட்டி வந்ததற்காக பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி