சேலம் கிழக்கு மாவட்ட
திமுக
அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கெங்கவல்லி நகர தேமுதிக செயலாளர் பூபதி தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி, கிழக்கு மாவட்ட
திமுக செயலாளர் சிவலிங்கம் முன்னிலையில்
திமுகவில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏவும் , மாவட்ட துணை செயலாளருமான சின்னதுரை, மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் ஆறுமுகம், தலைமை
பொதுக்குழு உறுப்பினர்
முத்துலிங்கம், ஒன்றிய
செயலாளர் சித்தார்த்தன், கெங்கவல்லி நகர செயலாளர் பாலமுருகன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் தங்கபாண்டியன்
உள்பட பலர் கலந்து
கொண்டனர்.