காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், 92. இவர், நேற்று, உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு ஆத்தூர் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் அர்த்தநாரி தலைமையிலான கட்சியினர் மறைந்த மன்மோகன் சிங் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து பூக்கள் தூவி மரியாதை செலுத்தினர். காங்கிரஸ், திமுக, மதிமுக, இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விசிக, தமிழ் மாநில காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.