சேலம் மாவட்டம், ஆத்தூர் ரயிலடி தெருவில் அரசு டாஸ்மார்க் கடை (எண் 7141) உள்ளது. டாஸ்மாக் கடை அமைந்துள்ள வழிதடத்தில் இரயில் நிலையம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தனியார் பள்ளி, தனியார் மருத்துவமனைகள், மற்றும் பல்வேறு கிராமப்புற பகுதிகளுக்கு செல்லும் முக்கிய வழித்தடமாக உள்ளது. டாஸ்மாக் கடையை அகற்ற கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் 27 (செப்) திரண்டு அரசு டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த இந்த போராட்டத்தால் மதியம் 12 மணிக்கு திறக்கும் அரசு மதுபான கடை மூடப்பட்டது. இதனால் மது பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். போராட்டம் முடிவுற்ற நிலையில் அப்பகுதியில் கடை எப்போது திறக்கும் என ஆர்வத்துடன் காத்திருந்த மது பிரியர்கள்.