சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் மரணப்படுக்கையில் இருக்கும் ஆத்தூர் அரசு மருத்துவமனை, ஆத்தூர்,
நரசிங்கபுரம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன்தலைமையில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சர் செம்மலை பங்கேற்று கண்டன உரையில் ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சியில் பல்வேறு திட்டங்கள் கிடப்பில்போட்டுள்ளதாகவும், ஆத்தூர்நகராட்சிஆணையாளர் கூடுதலாக நரசிங்கபுரம் நகராட்சி ஆணையாளராக செயல்படுவது இரண்டு பொண்டாட்டிக்காரர் நிலைமையாக ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் இருந்து வருவதாக முன்னாள் அமைச்சர் செம்மலை சாடல் , ஆத்தூர் நகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் புதிதாகக் கட்டி உள்ள வணிக வளாகங்களை முறையாக ஏலம் விடாமல் இடைத்தரகர் மூலம் பினாமி பெயரில் கடைகளை ஏலம் எடுக்க திமுக நகராட்சி நிர்வாகம் முயற்சி செய்து வருவதாகவும், ஆத்தூர் அரசு மருத்துவமனை கோமா நிலையில் உள்ளதாகவும் 60 மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும் ஆனால் 18 மருத்துவர்கள் மட்டுமே பணிபுரியக்கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் திமுக ஆட்சியில் ஆத்தூர் அரசு மருத்துவமனை கோமா நிலையில் உள்ளதாகவும், அரசு மருத்துவமனை உரிய மருத்துவர் நியமனம் செய்ய வேண்டுமென கண்டன கோஷங்கள் முழங்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்