சேலம் மாவட்டம் தலைவாசல் அதிமுக ஒன்றிய செயலாளர் ராமசாமி தலைமையில், நேற்றிரவு ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில் அதிமுக நிர்வாகிகள் துண்டு பிரசுரங்கள் வழங்கினர். அதில் திமுக ஆட்சியின் அவலங்கள், திமுக ஆட்சியில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை, தமிழகத்தில் போதை பொருள் அதிகமாக விற்பனையாகி வருகிறது, ஸ்டாலின் ஆட்சி உடனடியாக கலைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை குறிப்பிடப்பட்டுள்ளன.