சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஏத்தாப்பூர் பகுதியில் அமைந்துள்ள உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முத்துமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த நிலையில் திரைப்பட காமெடி நடிகர் யோகிபாபு முத்து மலை முருகன் கோவிலில் இன்று சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். மேலும் அங்கு கூடியிருந்த பக்தர்கள் நடிகர் யோகிபாபு பார்த்தவுடன் அனைவரும் தனது செல்போனில் புகைப்படம் எடுத்தும் செல்பி எடுத்துக் கொண்டனர்.