சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஏத்தாப்பூரில் அமைந்துள்ள உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முத்துமலை முருகன் கோவிலில் இன்று நடிகர் யோகிபாபு சாமி தரிசனம் செய்தார். திடீரென கோவிலுக்கு வந்த நடிகர் யோகிபாபுவை பார்த்த ரசிகர்கள் ஆர்வத்துடன் போட்டோ எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர். மேலும் சுவாமி தரிசனம் செய்ய வந்த தனியார் பள்ளி பள்ளி மாணவ மாணவியர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். கோவில் நிர்வாகம் அவருக்கென சிறப்பு வழிபாடு செய்ததில் யோகிபாபு கலந்து கொண்டார் மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் முருகனின் திருவுருவம் படம் கௌரவப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து பிரசாதம் பெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.