சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையம் அபிநவம் பகுதியை சேர்ந்த மணி என்பவரது மகன் அரவிந்த், 29. மனவளர்ச்சி குன்றிய நபரான இவர் இன்று வசிஷ்ட நதியில் குளிப்பதற்கு சென்றுள்ளார்.
ஆழமான பகுதியில் குளித்தபோது தண்ணீரில் இழுத்துச் சென்றதில் தண்ணீருக்குள் மூழ்கியுள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த தற்காலிக தபால் ஊழியர் சமூக சேவகர் சவுந்தரபாண்டியன் அந்த வாலிபரை மீட்கும் முயற்சியில் தண்ணீரில் இறங்கி தேடினார் ஆனால் ஆழமான பகுதிக்குள் உடல் மூழ்கியதால் ஒரு மணிநேரமாக மீட்க முடியாத சூழல் ஏற்பட்டது. அவரை இறந்த நிலையில் பின்னர் மீட்கப்பட்டார். இதுகுறித்து ஏத்தாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.