சேலம் மாவட்டம் ஏற்காடு மலை அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் கார்த்திகேயன் (வயது 25). இவர் நேற்று ஆத்தூர் ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 500 அடி தூரத்தில் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது சேலத்தில் இருந்து ஆத்தூர் வழியாக விருத்தாசலம் செல்லும் பயணிகள் ரெயில் கார்த்திகேயன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கார்த்திகேயன் அதே இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சேலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.