சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் வசித்து வருபவர் சேகர் ராணி தம்பதியர் சேகர் இன்று வழக்கம் போல் வேலைக்கு சென்று உள்ளார். அவரது மனைவி வீட்டில் இருந்த போது அவரது வீட்டில் வளர்த்து வந்த நாய் வெளியே குறைக்கவே ராணி வெளியே சென்று பார்க்கும் போது வீட்டின் முன்பு 5 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு அளித்த தகவலின் பெயரில் தீயணைப்பு நிலை அலுவலர் அசோகன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பின் இடுக்கியில் லாபாகமாக நல்ல பாம்பை உயிருடன் பிடித்தனர். பின்னர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.