தலைவாசல் அருகே சதாசிவபுரம் ஊராட்சி முன்னாள் தலை வர் தமிழ்செல்வி. இவருடைய கணவர் வேல்முருகன். இவர்க ளுக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த ஆத்தூர் தீயணைப்பு நிலைய வீரர் கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். உதவி கலெக்டர் ரமேஷ். தாசில்தார் ஜெயக்குமார், வருவாய் ஆய்வாளர் ராதா, கிராம நிர்வாக அதிகாரி துரையரசன் மற்றும் வருவாய்த்துறை யினர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அப்போது மின்கசி வால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.