சுவாமி தரிசனம் செய்த பக்கதர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

81பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெத்தநாய்க்கன் பாளையத்தில் இரண்டாயிரம் அடி உயரம், 1860 படிக்கட்டுகள் கொண்ட அருள்மிகு ஸ்ரீ கொப்புக் கொண்ட பெருமாள் மலைகோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் ஐந்து சனிக்கிழமையும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் மூன்று வார சனிக்கிழமைகளில் சிறப்பு தரிசனம் செய்ய பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்நிலையில் 28 (செப்) புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை என்பதால் இரவு 12 மணி முதலே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வந்த நிலையில் சேலத்தைச் சேர்ந்த மாதேஸ்குமார் என்பவர் தனது மனைவி சுதா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பெத்தநாய்க்கன்பாளையம் கொப்புக்கொண்ட பெருமாள் கோவிலுக்கு படி ஏறி சென்று சுவாமி தரிசனம் செய்தார். அப்போது திடீரென மாதேஸ்குமார் மயக்கம் ஏற்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்தார். தகவலறிந்து வந்த ஏத்தாப்பூர் போலீசார் உடலைக் கைப்பற்றி பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்து போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த போது மயங்கிய நிலையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி