தடுப்பணையில் சிக்கிய 5 அடி நீளமுள்ள குரவை மீன்

72பார்த்தது
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கல்வராயன் மலை தொடர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கல்வராயன் மலை அடிவாரப் பகுதியான 10 ஏக்கர் காலனி, அய்யங்காடு உள்ளிட்ட பகுதி வழியாக செல்லும் கல்லாற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. ஆயுத பூஜை பண்டிகையொட்டி தொடர் விடுமுறையால் அப்பகுதி இளைஞர்கள் ராமநாயக்கன் பாளையம் அருகே உள்ள கல்லாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் குளித்தும் , மீன் பிடித்தும் மகிழ்ந்தனர்.
தொடர்ந்து ஒரு சில இளைஞர்கள் மீன்களைப் பிடித்தனர்.
அப்போது 5 அடி நீளமுள்ள குரவை மீன் சிக்கியது. மேலும் இளைஞர்கள் குரவை மீனை பிடித்து ஊருக்குள் கொண்டு வந்தனர் அப்போது அதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்தோடு புகைப்படம் எடுத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி