நடிகர் சைஃப் அலிகானின் வீட்டிற்கு திருட வந்த நபர் உடன் ஏற்பட்ட மோதலில் அவர் ஆறு இடத்தில் கத்தியால் குத்தப்பட்டார். இதில் முதுகெலும்பின் கீழ் பகுதியில் குத்தபட்ட கத்தி சிக்கியிருந்தது. இதனால் Spinal fluid எனப்படும் திரவக் கசிவு இருந்ததால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்கள். ஐந்து மணி நேர போராட்டத்திற்கு பின் சைஃப் அலிகான் முதுகில் இருந்த 2.5 இன்ச் கத்தி நீக்கப்பட்டது. நீக்கப்பட்ட கத்தியின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.