உத்தரப் பிரதேசம்: 60 வயது முதியவர் ஒருவர் ’அல்லாஹ்வுக்கு என்னை உயிர்த்தியாகம் செய்கிறேன்' என கடிதம் எழுதிவிட்டு கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பக்ரீத் தினத்தில் தற்கொலை செய்த நபர் இஷ் முகமது அன்சாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலை என்பதை உறுதி செய்துள்ள போலீசார் அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருவதாக கூறினர்.