கேரளா: மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. இன்று மாலை 5 மணிக்கு மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். இதைத்தொடர்ந்து, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். மகர விளக்கு பூஜையின் பெருவிழாவான மகர ஜோதி விழா ஜன.14ம் தேதி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து, பக்தர்கள் ஜன.19ம் தேதி வரை தரிசனம் செய்யலாம் என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது.