இங்கிலாந்தின் லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (ஜூன் 11) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. WTCல் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா கோப்பையை தக்கவைக்கவும், முதல் கோப்பையை பெற தென்னாப்பிரிக்க அணியும் முனைப்புடன் இன்று விளையாடவுள்ளன. இதனால் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் வெற்றியை எதிர்நோக்கி இருக்கின்றனர்.