இங்கிலாந்தின் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (ஜூன் 11) SA Vs AUS அணிகள் உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மோதுகின்றன. முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பௌலிங் தேர்வு செய்தது. முதலில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்த நிலையில், 23.1 ஓவர் முடிவில் உணவு இடைவேளைக்குள் 4 விக்கெட் இழந்த ஆஸ்திரேலிய அணி தடுமாறி 67 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் பதற்ற சூழலில் இருந்தனர். தென்னாப்பிரிக்க அணியினர் கொண்டாட்டத்தில் மகிழ்ந்தனர்.