சிக்கன் குழம்பில் ரப்பர் பல்லி.. வதந்தி பரப்பியவர்கள் கைது

65பார்த்தது
கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரத்தில் இயங்கிவரும் கோவை பிரியாணி ஹோட்டலில் நான்கு பேர் சாப்பிட சென்றுள்ளனர். அவர்கள் வாங்கிய சிக்கன் குழம்பில் பல்லி இருப்பதாக ஊழியர்களிடம் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இதுகுறித்த வீடியோவையும், பத்திரிகை குழுவுக்கு அனுப்பியுள்ளனர். தொடர்ந்து, இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அது ரப்பர் பல்லி என்பதும் வேண்டுமென்றே வதந்தி பரப்பியதும் தெரியவந்தது. உடனடியாக அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி