10-ம் வகுப்பு பயிலும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 1000 பேருக்கு மாதம் ₹1,000 வழங்கும் திட்டத்திற்கான தேர்வுமுடிவு நாளை (ஜூன் 12) வெளியாகவுள்ளது. இதற்கான திறனாய்வுத் தேர்வை 1,43,351 மாணவர்கள் எழுதி இருந்தனர். தேர்வு முடிவுகள் www.dge.tn.gov.in இணையதளத்தில் நாளை வெளியாகிறது. இதில், தேர்வாகும் 1,000 மாணவர்களுக்கு (500 மாணவர்கள் + 500 மாணவிகள்) இளநிலை பட்டப்படிப்பு வரை மாதம் ₹1,000 அரசுவழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.