தெற்கு ரயில்வே, நடப்பு நிதியாண்டில் ரூ. 9,170 கோடி வருவாய் ஈட்டி உள்ளதாகவும் இது கடந்த ஆண்டை விட ஐந்து சதவீதம் அதிகம் என்றும் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார். "தெற்கு ரயில்வே வருவாய் உயர்ந்து வருகிறது, இதில் தான் 91.1 சதவீதம் ரயில்கள் சரியான நேரத்தில் இயக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, 52.80 கோடி பேர் பயணம் செய்தனர். இந்த ஆண்டில், 54.50 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்" என்றார்.