அமெரிக்காவில் வாஷிங்டனை தலைநகராகக் கொண்டு ஸ்டார்பக்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தேநீர், காபி போன்றவற்றை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில், கடந்த செப்டம்பர் மாதம் சி.இ.ஓ. பதவிக்கு பிரையன் நிக்கோல் நியமிக்கப்பட்டார். நிறுவனத்தின் வியாபாரத்தை அதிகப்படுத்த வேண்டும் என இவருக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. அதை வெற்றிகரமாக அவர் முடித்ததால், 2024ம் ஆண்டில் பணி செய்த 4 மாதங்களுக்கு மட்டும் சுமார் ரூ.829 கோடி ஊதியம் பெற்றுள்ளார்.