சென்னையை சேர்ந்த, நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான மாத ஓய்வூதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. விளையாட்டில் சிறந்து விளங்கி தற்போது நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் விளையாட்டு வீரர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் மாதம் ரூ.6000 ஓய்வூதியம் பெறலாம். இந்தத் திட்டம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் (SDAT) நிர்வகிக்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு https://www.tnsports.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.