மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்களின் காணிக்கைகளை கோயிலில் உள்ள உண்டியல்கள் செலுத்துவது வழக்கம். இந்நிலையில் கோயில் உண்டியல்கள் நேற்று முன்தினம் (மே 30) திறக்கப்பட்டு எண்ணும் பணி திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் காணிக்கையாக ரூ.55 லட்சத்து 40 ஆயிரத்து 624 ரொக்கமும், தங்கம் 19 கிராமும், வெள்ளி 340 கிராமும் கிடைத்துள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.