சென்னையில் வரும் 21ம் தேதி முதல் கட்டிடக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் டன்னுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி 1 டன்னுக்கு குறைவாக கட்டிட கழிவுகள் இருந்தால் சென்னை மாநகராட்சியே அகற்றும் என்றும், 1 டன்னுக்கு மேல் இருந்தால் டன்னுக்கு ரூ.2,000 வீதம் வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் கழிவுகளை கொட்ட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.