பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கீழதாயில்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த பாலகுருசாமி குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். அவரது குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். படுகாயமடைந்தோருக்கு ரூ.1 லட்சம், லேசான காயமடைந்தோருக்கு ரூ.50,000 நிவாரணமாக வழங்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.