நெல் சாகுபடிப் பரப்பினை அதிகரித்து உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய "நெல் சிறப்புத் தொகுப்பு திட்டம்' செயல்படுத்தப்படும் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் அவர், நெல் சிறப்புத் தொகுப்பு திட்டத்திற்கு ரூ.160 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இயற்கை வேளாண் திட்டத்திற்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார்.