தமிழ்நாடு அரசு, பொதுமக்களுக்கு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை வழங்குவதை தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்ய வேண்டும். ரொக்க தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள் ஏமாற்றம் அடைந்துவிடுவார்கள். முதலமைச்சர் தலையிட்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.