தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்துக்கு தனியார் நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்த நிலையில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக ED குற்றஞ்சாட்டியது. இது தொடர்பான விசாரணைக்கு இன்று ஆஜராக மொத்த விற்பனை பிரிவு பொது மேலாளர் சங்கீதா, துணை மேலாளர் ஜோதி சங்கருக்கு ED அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.