இந்தியாவில் பெரும்பாலான வங்கி ஏடிஎம் எந்திரங்களில் ரூ.500 நோட்டு மட்டுமே அதிகளவில் இருப்பதாகவும், ரூ.100, ரூ.200 நோட்டுகள் இல்லை எனவும் ரிசர்வ் வங்கிக்கு அதிகளவில் புகார்கள் சென்றன. இந்த நிலையில் அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், “அனைத்து வங்கிகள் மற்றும் ஏடிஎம் ஆபரேட்டர்கள் தங்களது ஏடிஎம்-கள் வழியாக ரூ.100 மற்றும் ரூ.200 மதிப்புள்ள நோட்டுகளை வைத்து இருக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.