பழமையான கிறிஸ்தவ தேவாலயங்களைப் புதுப்பிக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். 2025-26 பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் அவர், தமிழகத்தில் உள்ள பழமையான தேவாலயங்களை புதுப்பிக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார். வேளாங்கண்ணி, சென்னை சாந்தோம், பெசன்ட்நகர், திருச்சி, நாகை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், கோவையில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள தேவாலயங்கள் இதன் மூலம் பயன்பெறும்.