இந்திய விளையாட்டு ஆணையத்தில் உள்ள சமையல்காரர் பணியிடங்கள் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஹோட்டல் மேனேஜ்மெண்ட், கேட்டரிங்க், சமையல் கலை ஆகியவற்றில் இளங்கலை பட்டப்படிப்பு, டிப்ளமோ முடித்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். மத்திய விளையாட்டு துறையின் கீழ் இயங்கும் இதில் மொத்தம் 7 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் https://sportsauthorityofindia.nic.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.