மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், உலகனேரி, உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை, உத்தங்குடி, பாண்டி கோவில் ஆகிய பகுதிகளில் குப்பை கொட்டினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும், குப்பை கொட்டிய நபர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு விடுத்த 24 மணி நேரத்திற்குள் அந்த குப்பைகளை அகற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.