2012 ஆம் ஆண்டு பசும்பொன் தேவர் ஜெயந்தி முடித்துவிட்டு மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தவர்கள் மீது பெட்ரோல் பாம் வீசியதில் 7 பேர் உயிரிழந்தனர். இதில் பசுபதி பாண்டியனின் ஆதரவாளர் ரவுடி ராமர் பாண்டியனுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து 7 வருடங்கள் கழித்து விசாரணைக்காக சென்றுவிட்டு திரும்பிய வழியில் ராமர் பாண்டியனை வழிமறித்து கும்பல் ஒன்று அவரது தலையை துண்டாக்கி கொலை செய்தது. இந்நிலையில் மதுரை கருப்பாயூரணி பகுதியைச் சேர்ந்த வினோத்குமார், பூவந்தி பகுதியைச் சேர்ந்த மகேஷ்குமார், மேலூர் பகுதியைச் சேர்ந்த பாரதி, தனுஷ் மற்றும் தர்மா ஆகிய ஐந்து பேர் இந்த வழக்கு தொடர்பாக சரணடைந்துள்ளனர்.