டெல்டாவின் கடைமடை மாவட்டங்களான நாகை, மயிலாடுதுறை, திருவாரூரின் பெரும்பாலான பகுதிகளில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே தேவைப்படும் பருத்தி வயல்களில் அதிகம் நீர் தேங்கியுள்ளதால், வேர்கள் அழுகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இன்னும் ஒரு சில வாரங்களில் முதல் அறுவடை செய்ய வேண்டியுள்ள சூழலில் மழையால் செடிகளில் பூக்கள், காய்கள் உதிர்கின்றன.