ரோஜா மலர் மொட்டை துவையல் செய்து சாப்பிட்டால் சீதபோதி அகலும். பித்த நீர் அதிகமாகும் காரணத்தால் தோன்றும் மயக்கம், வாய்க்கசப்பு, நெஞ்செரிச்சல் போன்ற கோளாறுகளைத் தீர்க்க ரோஜாப் பூவைக் கஷாயம் செய்து பசுவின் பாலுடன் சேர்த்து பருகலாம். ரோஜா பூக்களில் இருந்து 'அத்தர்' எனப்படும் நறுமணம் கொண்ட எண்ணெய் எடுக்கப்படுகிறது. ரோஜா இதழ்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகின்றன.