பிரபல பிரிட்டீஷ் நடிகை ஒலிவியா ஹசி தனது 73வது வயதில் காலமானார். இவர் கடந்த 1968-ல் வெளியான 'ரோமியோ ஜூலியட்' என்ற திரைப்படத்தில் ஜூலியட் கதாபாத்திரத்தில் நடித்து உலகளவில் புகழ்பெற்றார். மிக அழகான மற்றும் திறமையான நடிகை என அறியப்பட்ட ஒலிவியா நேற்று (டிச. 27) புற்றுநோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்ததாக அவர் குடும்பத்தார் தெரிவித்தனர். மறைந்த ஒலிவியாவுக்கு கணவர் மற்றும் மூன்று பிள்ளைகள் உள்ளனர்.