டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் தொடர் முடிந்த பிறகு ஓய்வு குறித்து அதிகாரப்பூர்வமாக அவர் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ரோகித் சர்மா இதுவரையில் 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12 சதங்களுடன் 4301 ரன்கள் எடுத்துள்ளார்.