SBI வங்கியில் ரூ.20 லட்சம் கொள்ளை

66பார்த்தது
SBI வங்கியில் ரூ.20 லட்சம் கொள்ளை
மணிப்பூர் சுராசந்த்பூர் மாவட்டத்தின் முக்கிய இடத்தில் SBI வங்கிக் கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்குள், இன்று (மே 2) பிற்பகல் 2 மணி அளவில் ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் நுழைந்துள்ளனர். தொடர்ந்து, அங்கிருந்த அதிகாரிகளை மிரட்டி சுமார் 20 லட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளை அடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, தனிப்படை அமைத்து கொள்ளை கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி