மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் தேசிய சேமிப்புச் சான்றிதழில் (NSC) முதலீடு செய்வதன் மூலம் நிலையான வருமானத்தையும், ஏராளமான நன்மைகளையும் பெற முடியும். 5 ஆண்டுகள் முதிர்வு காலத்துடன், பாதுகாப்பான நிதி எதிர்காலத்தை உருவாக்க விரும்புவோருக்கு இது சிறந்த தேர்வாகும். ஜன. - மார்ச் 2025 காலாண்டில், தேசிய சேமிப்புச் சான்றிதழ்களுக்கான வட்டி விகிதம் 7.7%ஆக உள்ளது, இதற்கு ஆண்டுதோறும் கூட்டு வட்டியும் வழங்கப்படுகிறது. மேலும், ஒரு நிதியாண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை விலக்கு பெற முடியும்.